உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்.பியாக நியமனம்.!

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கியவருமான ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமன எம்.பி.யாக அறிவித்தார்.

அட இது வேலியா இல்ல பூச்சியா? குழம்பிய மக்கள்.. வைரலாகும் வீடியோ!

இந்திய பாரஸ்ட் அதிகாரியான பர்வீன் கஸ்வான், அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவில் ஒரு வித்தியாசமா உயிரினம் மரத்தில் ஊர்ந்து சென்றது. அந்த விடியோவை கண்டா மக்கள் சிலர் அது வெட்டு கிளி என்றும், சிலர் குச்சி பூச்சி என்றும் கமன்ட் செய்து வருகின்றனர். ஆனால் அந்த விடியோவை பார்க்கையில் அந்த இரண்டு பூச்சிகள் மாதிரி தெரியவில்லை எனவும் சிலர் கூறி வருகின்றனர். இதனால் அந்த விடியோவை பார்த்த மக்கள், குழப்பத்தின் உச்சத்திற்கு … Read more

கொரோனா வைரஸ்.. ரோஹித் கூறும் அறிவுரைகள்!

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அறிவுரைகள் கூறி வரும் நிலையில், ரோகித் சர்மாவும் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, உலக மக்கள் அனைவரும் இணைந்து கொரோனவை எதிர்த்தால் மட்டுமே அவற்றிலிருந்து விடுபட முடியும். கொரோனவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக … Read more

சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பிரதமர் மோடி ட்வீட்.!

கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் இருந்தால் பகிருங்கள் என்று பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை இருந்தால் பகிருங்கள் என்றும் சிறந்த தீர்வு அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் கொரோனா  வைரஸுக்கான தீர்வுகளை நிறைய பேர் பகிர்ந்து கொண்டியிருக்கின்றன அதனை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.  Harnessing innovation for a healthier planet. A lot of people … Read more

மேக்ஸ்வெல்லுக்கு திருமணமா? அதுவும் இந்திய வம்சாவளி பெண்ணுடனா!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக வலம்வந்தவர், க்ளென் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலியா அணி சார்பாக பலபோட்டிகளில் விளையாண்டு வந்துள்ளார். மேலும், ஐபிஎலிழும் பஞ்சாப் அணி சார்பாக விளையாடினார். அண்மையில் இவர் தற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு வேண்டுமென ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திடம் கூறியிருந்தார். இதனைதொடர்ந்து தேசிய அணியிலிருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 தொடரான பிக்பாஷ் தொடரில் விளையாடி வருவார். இந்நிலையில், மேக்ஸ்வெல் தனக்கு திருமண நிச்சியமானதும், அந்த பெண் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய … Read more

காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் குணமாகும் வரை வீட்டில் இருக்க வேண்டும் – தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பு.!

கொரோனா எதிரொலியால், தலைமை செயலகத்துக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தெர்மல் பரிசோதனை செய்யப்படும் என்றும்  ஊழியர்கள் கைகளை 20 விநாடிகள் சோப்பால் கழுவவும், வெந்நீர் பருகவும் என அனைத்துத்துறை செயலர்களுக்கும் தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பியுள்ளார்.  மேலும் தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த கூட்டங்களை அவசியம் ஏற்படாவிடில் நடத்தக்கூடாது என்றும் ஊழியர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் குணமாகும் வரை வீட்டில் இருக்க வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் … Read more

Breaking: அனைத்து கல்விநிறுவனங்கள் மூட உத்தரவு.!

 அனைத்து கல்விநிறுவனங்கள் வருகின்ற 31-ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும் பத்தாம் வகுப்பு , +2 வகுப்பு தேர்வுகள் மற்றும் நுழைவு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அனைத்து விளையாட்டு அரங்கங்கள், கிளப்புகள், டாஸ்மாக் பார்கள் மார்ச் 31-ம் தேதி மூடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இதனால் … Read more

“கொரோனா” பெயரில் ஆர்வம் காட்டிவரும் திரைத்துறையினர்!

உலகமுழுவதும் அனைத்து மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 114 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த கொடூர வைரஸ் தாக்கத்தால் இருவர் உயிரிழந்துள்ளனர். மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, இதனை இந்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. தற்பொழுது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் இந்த பெயர், தற்பொழுது சினிமாவிலும் வரவுள்ளது. அதாவது, “கொரோனா” எனும் பெயரை வைத்து தற்பொழுது ஹிந்தியில் “கொரோனா பியார் … Read more

கொரோனா எதிரொலி! தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு ரத்து!

சமீப காலமாக கொரோனா வைரஸ் நோயானது உலகையே அச்சுறுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். முதலில், சீனாவில் பரவிய இந்த நோய் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், மற்ற நாடுகளிலும் இந்த நோய் பரவி வருகிறது. இதனையடுத்து, நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா எதிரொலி காரணமாக, ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அஜித்தின் வலிமை … Read more

மார்ச் 18ம் தேதி யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

யெஸ் வங்கி படிப்படியாக சிக்கலில் இருந்து மீட்கப்படும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பேட்டி அளித்துள்ளார். அப்போது யெஸ் வங்கியில் முதலீட்டாளர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என தெரிவித்தார். இந்திய வங்கித்துறை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது எனவும் குறிப்பிட்டார். மேலும் வரும் மார்ச் 18ம் தேதி யெஸ் வங்கி வழக்கம்போல் செயல்படும் என தெரிவித்தார். இதனிடையே வராக்கடன் பிரச்னையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய யெஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பட்டு கீழ் … Read more