Breaking:”கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக நபர் குணமடைந்தார்” -அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட் ..!

ஓமனில் இருந்து தமிழகம் வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு  நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்த போது கொரோனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என  என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். #Corona update: a good news for Our state, the Pt undergoing treatment at #RGGH is tested negative for Corona,this speedy … Read more

கோழிக்குஞ்சு ,முட்டைகள் வாங்க அனுமதி வேண்டும் -தமிழக கால்நடைத்துறை..!

பிற மாநிலங்களில் இருந்து கோழிக்குஞ்சுகள் ,முட்டைகள் ,  தீவனம் ஆகியவை  வாங்க உரிய அனுமதி பெற வேண்டும் என  தமிழக கால்நடைத்துறை கூறியுள்ளது.உரிய அரசு அலுவலர்களும் முறையாக சான்றிதழ் பெற்ற பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என கூறியுள்ளது. மேலும் முட்டை உற்பத்தியாளர்கள் , ஒருங்கிணைப்புக்குழு , கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்திற்கும் , பல்லடம் கறிகோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழுவினரிடமும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையெடுத்து அனைத்து கோழிப்பண்ணைகளில் தீவிர உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை கையாளும் தமிழக … Read more

தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடல் படைத்துள்ள சாதனை!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு  போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.  மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வந்த நிலையில், இப்பாடல் மூலம் மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது. அது என்னவென்றால் மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் வெளியான குட்டி ஸ்டோரி பாடல் … Read more

ஈரானில் ஒரே நாளில் 54 பேர் பலி.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,042ஆகவும் .. பலி எண்ணிக்கை 291 ஆக உயர்வு..

கொரோனா வைரஸ் சீனாவுக்கு அடுத்து ஜப்பான் மற்றும் தென்கொரியா , ஈரான் ஆகிய நாடுகளில் அதிக அளவில் பாதித்துள்ளது. ஈரானில் கடந்த 07-ம் தேதி ஒரே நாளில் 21 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 145 ஆக உயர்ந்தது. பாதிப்பு எண்ணிக்கை 5,823 ஆகவும் இருந்தது. இதையெடுத்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 49 பேர் பலியாகி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது.  ஈரான் நாட்டு அரசு சார்பில் வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என கூறிய … Read more

27-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது! டி.ராஜேந்தர் அதிரடி!

டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோக சங்க தலைவராக உள்ளார்.  இவர் அளித்துள்ள பேட்டியில் டிடிஎஸ் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர்  பேசுகையில், திரைப்படங்களுக்கான டிடிஎஸ், தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இல்லாமல் தமிழகத்தில் மட்டும்தான் விநியோகஸ்தர்கள் இந்த டிடிஎஸ் கட்ட வேண்டும் என்று சட்டம் உள்ளது. இப்படி … Read more

உறுதியான தூக்கு தண்டனை ! குற்றவாளி வினய் சர்மா புதிய கருணை மனு

நிர்பயா வழக்கில் குற்றவாளி வினய் சர்மா  டெல்லி துணை நிலை ஆளுநரிடம் புதிய கருணை மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 … Read more

போலி பிஎச்டி சான்றிதழ் – அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு TDS எனப்படும் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை முறையாக செலுத்தவில்லை எனக் கூறி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் சிலரின் பிஎச்டி சான்றிதழ்களை, அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வுசெய்தபோது, போலி என கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் கருணாமூர்த்தி அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், 2020-21ம் கல்வியாண்டு இணைப்பு அங்கீகாரம் … Read more

மத்திய பிரதேசத்தில் நீடிக்கும் குழப்பம் ! எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனை

மத்திய பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.ஆனால் இதற்கு இடையில் டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார்.மேலும் மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20-க்கும் மேற்பட்டோர்  ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.இந்நிலையில்  குழப்பம் நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் கமல்நாத் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தனது கணவருடன் இணைந்து ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய நடிகை!

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, உலக அழகியும் கூட. இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல இந்தி படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவருடன் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   … Read more

கொரோனா அறிகுறி -15 வயது சிறுவன் டிஸ்சார்ஜ்

அண்மை காலமாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியவரை பரவியுள்ளது.இந்தியாவை பொறுத்தவரை 50 -க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 15 வயது சிறுவனுக்கு  கொரோனா அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த சிறுவனுக்கு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் பரிசோதனையில் சிறுவனுக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.