கூகுள்-பே மூலமாக இனி ஃபாஸ்ட்டேக் ரீசார்ச் செய்யலாம்.. அது எப்படி?

சுங்க சாவடிகளில் கூட்ட நெரிசல் மற்றும் நேரத்தை சேமிக்க நெடுஞ்சாலை துறை “ஃபாஸ்ட் டேக்” எனும் முறையை நடைமுறையில் கொண்டுவந்துள்ளது. இதன் மூலமாக ஒரு அடையாள எண் கொண்ட ஒரு ஸ்டிக்கர் உங்கள் வாகன கண்ணாடியில் ஓட்டப்படும். அதன்பின், நமது வாகனம் சுங்க சாவடியை கடந்து செல்லும்போது அந்த ஸ்டிக்கரை அங்குள்ள கருவி ஸ்கேன் செய்து நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும். இதற்கு நாம் ரீசார்ச் செய்ய வேண்டும். இதனை நீங்கள் கூகுள்-பே … Read more

போதையில் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்..!

மதுரையில் உள்ள ஒரு ஊராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் மது போதையில் பள்ளிக்கு வந்தார். இதனை அறிந்த பெற்றோர், குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர். மதுரை மாவட்டம், மேலூர் கொட்டாம்பட்டி அடுத்து உள்ளது வலைச்சேரிப்பட்டி. அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இன்று செயல்பட்டு வருகிறது. 23 மாணவர்கள் பயின்று வரும் அந்த பள்ளியில் கோட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும், குமரேசன் என்பவர் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் … Read more

தமிழ்நாடு அணியின் முன்னாள் கேப்டன் பெல்லியப்பா மரணம் .!

தமிழ்நாடு மற்றும் தெற்கு மண்டல அணியின் முன்னாள் கேப்டன் பி.கே. பெல்லியப்பா நேற்று சென்னையில் காலமானார்.இவர் தமிழ்நாடு அணிக்காக 1959 முதல் 1974 ஆண்டு வரை விளையாடி உள்ளார். பி.கே. பெல்லியப்பா தொடக்க வீரர் மற்றும் விக்கெட் கீப்பர் ஆவார். இவர் 4061ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ரன்னாக 141 ரன்கள் அடித்து உள்ளார்.இவர் 93 கேட்ச்கள் , 43 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள்!

விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.  விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும், இந்த படத்தின் கலை இயக்குனர் சதிஷ் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது விஜய் … Read more

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.! தாக்குதலை தடுக்க மீனவர்கள் கோரிக்கை.!

ராமேஸ்வர மீனவர்கள் இந்திய கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி தமிழக மீனவர்களை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் 4000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்திய கடலில் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் தனுஷ்கோடி அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது ஜேசு அலங்காரம் என்ற மீனவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது. மேலும் இலங்கை படையினர், தமிழக மீனவர்களை … Read more

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த சீமான்!

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த சீமான். இந்தியன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பூந்தமல்லி அடுத்து நசரத்பேட்டையில் உள்ள இ.வி.பி  சினிமா தளத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு, செட் அமைக்கும்  பணி நடைபெற்று வந்தது. இந்த செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளதாகும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களது மரணத்திற்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ள … Read more

அக்மல் விளையாட தடை விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.!

பாகிஸ்தான் அணி வீரர் உமர் அக்மல் மீது லஞ்ச குற்றச்சாட்டு புகார் எழுந்து நிலையில்அது குறித்து உமர் அக்மலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அக்மல் அனைத்து வகையான போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான உமர் அக்மல் மீது லஞ்ச குற்றச்சாட்டு புகார் எழுந்து நிலையில் தற்போது அது குறித்து உமர் அக்மலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விசாரணை முடியும் வரை அக்மல் … Read more

ஆர்யாவின் அதிரடியான புகைப்படங்கள்! மெர்சலான ரசிகர்கள்!

ஆர்யாவின் அதிரடியான புகைப்படங்கள். நடிகர் ஆர்யா அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் தமிழ் படங்களில்  வருகிறார். இவருக்கு சைக்கிள் ரேஸ், ஜிம்மில் பயிற்சி எடுப்பது போன்றவற்றில் மிகவும் ஈடுபாடுள்ளவர். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிற நிலையில், இவர் ஜிம்மில் இருந்து எடுத்த அதிரடியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருவதுடன், … Read more

கேரளாவில் சுவாரசிய சம்பவம்.! திருட வந்த இடத்தில் புகைப்படத்தை பார்த்து மனம் மாறிய திருடன் .!

கேரளாவில் உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் திருடன் இரவு  5 கடைகளில் பணம், நகைகள் கொள்ளையடித்து உள்ளான். அப்போது ஒருவீட்டில் அந்த திருடன் இது ஒரு ராணுவ வீரரின் வீடு என்று தெரியாமல் திருட நுழைந்து விட்டேன் என திருடன் சுவற்றில் எழுதி இருந்தார். கேரளா மாநிலம் கொச்சி அருகே உள்ள திருவாங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு  5 கடைகளில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் … Read more

7 பேரின் விடுதலை: தமிழக அமைச்சரவைக் கொண்டு வந்த தீர்மானம் ‘பூஜ்யம் -மத்திய அரசு தகவல்

7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கொண்டு வந்த தீர்மானம் ‘பூஜ்யம்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.   ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில்   7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் இந்த … Read more