தல தளபதி ரசிகர்களின் டிவிட்டர் சண்டை கத்திகுத்தில் முடிந்தது!

முன்பெல்லாம் திரை நடிகர்களின் ரசிகர்கள் சண்டை யாருடைய போஸ்டர், கட்டவுட் பெரியது என வீதியில் சண்டையிட்டு கொன்றனர். தற்போது இணையத்திலும் இதே போட்டி நிலவி வருகிறது. யாருடைய யூ-டியூப் சாதனை பெரியது என தொடங்கி டிவிட்டரில் யார் ட்ரெண்டிங் என சண்டை முற்றி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்கள் சிலர், #RIPVIJAY என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகியது. அதற்கு போட்டியாக விஜய் ரசிகர்கள், #LongLiveVijay என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது. … Read more

நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா நிறைவேற்றம்

நாடு முழுவதும் உள்ள நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று மக்களவையில் ஒரே நதிநீர் தீர்ப்பாயம் அமைப்பது  தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்ளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பதிலை அடுத்து குரல் வாக்கு மூலம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டு தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்க முடிவு செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.

எஸ்.வி ரங்கநாத் காபி டே நிறுவனத்திற்கு தற்காலிக தலைவராக நியமனம்!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணா.இவரின் மருமகன் வி .ஜி சித்தார்த்தா காபி டே நிறுவனத்தை இயக்கி வந்தார். காபி டே நிறுவனத்தின் கிளைகள் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவிலும் உள்ளது. காபி டே நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக வி .ஜி சித்தார்த்தா மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து சித்தார்த்தா உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு இன்று நேத்ராவதி … Read more

இங்க பாருங்க கையில் தீயை வைத்து வித்தை காட்டும் தோழா பட நடிகை!!

இந்தி படங்களில் தோன்றினார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.கார்த்தியின் தோழா ஆகிய படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.இவர் தற்போது இந்தி படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுவருகிறார். இவரது இன்ஸ்டா பக்கத்தில் அது ஒளிரும் முட்டுக்கு ஒரு கையை முயற்சிப்பதைக் காட்டுகிறது, இது கனமாக இருந்தது, நோரா தனது அச்சங்களை மீறி புதிய திறமையைக் கற்றுக்கொண்டார். “இது #OSakiSaki படப்பிடிப்புக்கு ஒரு நாள் முன்னதாகவே இருந்தது .. அதில் தீ நடனம் செய்வது எப்படி என்பதை அறிய எனக்கு … Read more

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து செயல்படும் -ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங்

ஒரே நதிநீர் தீர்ப்பாயம் தொடர்பான விவாதம் மக்களவையில் நடைபெற்றது.இந்த விவாதத்தில் தமிழக எம்.பி.க்கள் ஒரே தீர்ப்பாயம் வரும் பட்சத்தில் நீண்ட காலம் போராடிப் பெறப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் என்னவாகும் என்று கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு  ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,நதிநீர் பிரச்னைகளுக்காக ஒரே தீர்ப்பாயம் அமைக்கப்பட்டாலும், காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணியைத் தொடரும் .நதிநீர் தீர்ப்பாய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகும் தற்போதைய நிலையே தொடரும் என்று  … Read more

பாகுபலி படத்தை போல பிரபாஸின் சாஹோ படமும் ஆண்ட்ராய்டு கேமாக உருவாக உள்ளது!

பிரமாண்ட படமான பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக சாஹோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படமும் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமான கார் சேசிங், ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இப்பட ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சாஹோ எனும் ஆண்ட்ராய்டு கேம் உருவாகி வருகிறது.  விரைவில் இந்த கேம் பயன்பாட்டுக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. பிக்ஸலாட் எனும் நிறுவனம் … Read more

அசத்தலான அச்சு முறுக்கு செய்வது எப்படி?

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவு பொருட்களை விரும்பி உண்பதுண்டு. அந்த வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுகின்ற உணவுகளில் ஒன்று அச்சு முறுக்கு. தற்போது இந்த பதிவில், சுவையான அச்சு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ஐ.ஆர்.20 அரிசி –  அரை கிலோ உளுந்தம் பருப்பு – 125 கிராம் டாலடா – 500 கிராம் உப்பு – சிறிதளவு செய்முறை முதலில் புழுங்கல் அரிசியை … Read more

ரஷ்யாவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த   ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது . தற்போது உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை 30-ல் இருந்து 33 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது . விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கான மானியத்தை 20% வரை உயர்த்தவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிட் பண்ட் முதலீடுகளை முறைப்படுத்த புதிய மசோதா கொண்டு வர  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது .ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க … Read more

இந்து அல்லாத ஒருவர் உணவு கொண்டு வந்தால் உணவை கேன்சல் செய்த வாடிக்கையாளர் – சோமாட்டோ பதிலடி!

ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனக்களில் தற்போது முன்னிலையில் சோமாட்டோ நிறுவனம் உள்ளது.இன்றைய பரப்பான உலகில் அனைவரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை வீட்டில் செய்து சாப்பிடுவதை விட ஆன்லைனில்  உணவு டெலிவரி செய்யும் நிறுவனக்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்து உள்ளது . இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சார்ந்த ஒருவர்  ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும்  நிறுவனனமான சோமாட்டோவில் உணவு ஆர்டர் செய்து உள்ளார்.உணவு டெலிவரி செய்பவர் இந்து அல்லாத ஒருவர் என்பதால் அந்த உணவை … Read more

ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து! பள்ளி கல்வித்துறை அரசாணை

ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவிதித்துள்ளது. சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று  தெரிவித்தார். இதனையடுத்து  ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து என்று அரசாணை … Read more