மாநாடு நடத்தி அதிமுக அரசு ஏமாற்றியுள்ளது – மு.க.ஸ்டாலின்

மீண்டும் ஒரு கானல் நீர் மாநாடு நடத்தி அதிமுக அரசு ஏமாற்றியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பாஜக, அதிமுக ஆட்சிகளில் வரலாறு காணாத அளவிற்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் நலனில் எந்தவித அக்கறையும் காட்டாத அரசுகளை அகற்ற வேண்டும் வேலையில்லா திண்டாட்டம் 13.6% முதல் 27.2% உயர்ந்துள்ளது.2வது முதலீட்டாளர் மாநாடு என்று மீண்டும் ஒரு கானல் நீர் மாநாடு நடத்தி அதிமுக … Read more

பிரிவினைவாத தலைவருடன் பாகிஸ்தான் அமைச்சர் பேச்சுவார்த்தை…!!

பிரிவினைவாதத் தலைவரான மிர்வாய் உமர் பரூக்குடன் பாகிஸ்தான் அமைச்சர் ஷா முகமது குரேஷி தொலைபேசியில் பேசியதற்கு தற்போது கண்டனம் எழுந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பிரிவினைவாதத் தலைவரான மிர்வாய்ஸ் உமர் பரூக் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி_யுடன்  தொலைபேசி மூலம் உரையாடல் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இருவரின் பேச்சு இந்தியாவின் ஒற்றுமை, நல்லிணக்கம், இறையாண்மை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றது என்று இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதர் சோகைல் மகமூத்துக்கு … Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது – முதலமைச்சர் பழனிச்சாமி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். எழும்பூரில் நடக்கும் குடியரசுத் தலைவர், முதலமைச்சர் பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது.அதில் பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி,மக்களை காக்கும் காவல்துறையினரின் பணி மகத்தானது காவலர்கள் உடல்நலன், மன திடத்தை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சட்டம், ஒழுங்கில் சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழகம் என விருது பெற்றிருக்கிறோம். ஊர்க்காவல் படையினரும் காவல்துறையினருக்கு பெரிதும் உதவி வருகின்றனர்.மேலும் 2 காவல் அங்காடிகள் திறக்கப்பட உள்ளன.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக … Read more

தில்லுக்கு துட்டு-2 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சந்தானம்!!!

தமிழ் சினிமாவின் முன்னனி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சந்தானம். பிறகு அவர் கதாநாயகனாக வளர்ந்த பிறகு அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தப்படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தினை ‘லொல்லு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாராகி ரிலீஸிற்கு ரெடி ஆகி விட்டது. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. … Read more

போலீஸ் திட்டியதால் தற்கொலை செய்த ராஜேஷ்!!காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ராஜேஷ் தற்கொலை தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் இருக்கக்கூடிய தனியார் நிறுவனத்தில் கால் டாக்சி ஓட்டுனர் ஆக பணிபுரிந்து வந்தவர் ராஜேஷ். கடந்த 25ஆம் தேதி சாலையில் காத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இரு காவல்துறையினர் அவரை தகாத வார்த்தையில் கடுமையாக திட்டி உள்ளனர்.அந்த சமயத்தில் காரில் தனியார் நிறுவனத்தில் பணி புணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் இருந்தார்.இதனால் காவலரின் அந்த … Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரும் வழக்கு:வழக்கை மீண்டும் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரும் வழக்கில் விசாரணையை பிப்ரவரி 5-ஆம்  தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்நிலையில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.தொடர்ந்து  நடைபெற்ற விசாரணையின் போது, தமிழகத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும் உரிய … Read more

யுவனின் இசையில் சீனு ராமசாமி இயக்கியுள்ள ‘கண்ணே கலைமானே’ ரிலீஸ் அப்டேட்!!!

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கண்ணே கலைமானே’. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களை வைரமுத்து எழுத யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இதனை தொடர்ந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக தற்போது … Read more

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடப்பட்டது…!!

தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் இறுதி வாக்காளர் பெயர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களின் இறுதிப் பட்டியலை இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டார். இந்த பட்டியலில் உள்ள விவரங்களின் படி , தமிழகத்தில் உள்ள மொத்த ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 960 ஆகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 765 ஆகவும் உள்ளது. மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை … Read more

மாணவர்களுக்கு ஓர் இனிய செய்தி!!மரம் வளர்த்தால் ஒவ்வொரு பாடத்திற்கும் 2 மதிப்பெண்கள்!! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்  மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு பாடங்களுக்கு 12 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஹரியானா இடைத்தேர்தலில் பாஜக வெற்றி …!!

ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவின் கிருஷ்ணன் மிதா வெற்றிபெற்றுள்ளார். ஹரியானா மாநிலம் ஜிந்த் தொகுதி M.L.A  வேட்பாளர் இந்திய தேசிய லோக் தளத்தின் ஹரி சந்த் மிதா உயிரிழந்தார்.இந்நிலையில் இந்த தொகுதிக்கு கடந்த திங்களன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளராக கிருஷ்ணன் மிதா_வும் , காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா வேட்பாளராக இறங்கினர். இந்நிலையில் இந்த தொகுதியில் நடைபெற்ற இடை தேர்தலின் முடிவு இன்று வெளியானது.இதில் தொடக்க முதலே பாரதீய … Read more