புதுச்சேரி யூனியன் பிரதேச இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு…!!

புதுச்சேரி யூனியன் பிரதேஷ் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேச மொத்த இறுதி வாக்காளர் வெளியிடப்பட்டுள்ளது.வெளியிடப்பட்ட விவரத்தின் படி புதுச்சேரி யூனியன் பிரதேச மொத்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 59 ஆயிரத்து 566 ஆக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சுழலில் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை புதுச்சேரி யூனியன் பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு வெளியிட்டார். அவர் … Read more

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும்…பிரதமர் நம்பிக்கை…!!

பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பதவிக்காலம் முடிவடைய இருக்கின்றது.இதையடுத்து வருகின்ற மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறம் சூழலில் மத்திய அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய இருக்கின்றது.இந்நிலையில் இன்று அனைத்து M.P_க்கள் மத்தியிலும் குடியரசு தலைவர் உரையாற்றிவருகின்றார்.அதில் மத்திய அரசாங்கம் செய்துள்ள ஏராளமான திட்டங்கள் , வளர்ச்சிப்பணிகள் ஆகியவற்றை குறித்து குடியரசு தலைவர் பேசினார். இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி … Read more

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வேலையின்மை குறித்து சர்வே வெளியீடு..!!

நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற சூழலில் வேலையின்மை குறித்த சர்வே வெளியிடப்பட்டுள்ளது. வேலையின்மை குறித்து தேசிய மாதிரி நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 2017-18ம் ஆண்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் , அந்த விகிதம் 6.1 சதவீதமாக அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. மேலும் அந்த ஆய்வறிக்கையில் கடந்த 1972-73ம் ஆண்டு நிலவிய வேலையின்மைக்கு சமமாக இந்த ஆண்டிற்க்கான வேலையின்மை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வேலையின்மை அறிக்கையில் மேலும் சொல்லப்பட்டதில் நகர்ப் புறங்களில் வேலையின்மையின் அளவு 7.8 சதவீதமாகவும், … Read more

வெஸ்ட்லேண்ட் நிறுவன ஹெலிகாப்டர் ஊழலில் ராஜீவ் சக்சேனாவுக்கு சிறை…!!

வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தில் ஹெலிகாப்டர்கள் வாங்கிய ஒப்பந்தத்தில் ராஜீவ் சக்சேனா_வுக்கு சிறை தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின்ஆட்சியில் இத்தாலி நாட்டை சேர்ந்த வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் ஊழல் முறைகேடுகள் நடந்ததாகவும் ,  அந்த நிறுவனம் பல்வேறு தரப்பினருக்கு சுமார் ரூபாய் 450 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த முறைகேடு குறித்து சம்மந்தப்பட்ட நபர்களை அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது.  இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக   தேடப்பட்டு வந்த துபாயைச் சேர்ந்த … Read more

ராகேஷ் அஸ்தானா நியமனத்திற்கு எதிரான மனு தள்ளுபடி…!!

விமான போக்குவரத்திற்க்கான பொது இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ராகேஷ் அஸ்தானா_விற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. C.B.I சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா மீது ஊழல் புகார் எதிரொலியையடுத்து அவருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதையடுத்து ராகேஷ் அஸ்தானா_வை  கடந்த 18-ம் தேதி அவரை விமான போக்குவரத்து துறையின் புதிய பொது இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில் இந்த நியமனத்தை எதிர்த்து, மூத்த வழக்கறிஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். … Read more

ஸ்ரீ வெங்டேஸ்வரா ஸ்வாமி கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஆந்திராவில் புதிதாக அமையவுள்ள வெங்கடேஸ்வரா ஸ்வாமி திருக்கோயில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலைப் போன்று ஆந்திரா மாநில தலைநகர் அமராவதியில் புதிதாக அமைய இருக்கும் திருக்கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆந்திரா தலைநகர் அமராவதியின் உள்ள வெங்கடபாலம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா ஸ்வாமி திருக்கோயில் அமைக்கப்படுமென ஏற்கனவே அம்மாநில முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று கோவில் கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் … Read more

சுகன்யான் திட்ட மாதிரி வடிவத்தை வெளியிட்ட  இஸ்ரோ…!!

இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தின் கனவுத் திட்டமான மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் மாதிரி வடிவமைப்பை இன்று இஸ்ரோ வெளியிட்டது. வருகின்ற 2021-ம் ஆண்டு மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ நிர்ணயித்து இருந்தது.இந்நிலையில் இஸ்ரோ இதற்காக பல்வேறு திட்டப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் B.S.L.V  பிரிவு இயக்குநர் ஹட்டன், சுகன்யான் திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இதற்கான புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் புதிய மாதிரி வடிவமைப்பை இஸ்ரோ இன்று … Read more

சினிமாவில் நடிக்கிறவன் நடிகன்!!அவன் தலைவன் அல்ல!!சீமான் ஆவேசம்

சினிமாவில் நடிக்கிறவன் நடிகன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த்தை எல்லாரும் பெயர் சொல்லி அழைப்பதில்லை. தலைவர் என்றே சொல்கின்றனர்.தலைவர்ன்னா யாரு. சினிமாவில் நடிக்கிறவன் நடிகன். அவன் தலைவன் அல்ல.சினிமா காரர்களுக்கு வாழ வீடு தர மாட்டான் ஆள நாடு கொடுப்பான் தமிழன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  

இடைக்கால பட்ஜெட்_டில் தொழில் முனைவோர்களின் எதிர்பார்ப்புக்கள் என்னென்ன…!!

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தொழில் முனைவோரின் எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தன்னுடைய ஆட்சிக்காலத்தின் கடைசி கால பட்ஜெட்டாக இடைக்கால பட்ஜெட்டை நாளைய தினம் தாக்கல் செய்ய இருக்கின்றது. இந்நிலையில் இந்த பட்ஜெட் வெளியீட்டில் தொழில் முனைவோர்களிடம் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த பட்ஜெட் மக்களவை தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் பட்ஜெட் வெளியிட இருப்பது தொடர்பாக நூற்பாலை சங்க பொதுச் செயலாளர் செல்வராஜ் கூறுகையில், “செயற்கை இழையை பொருத்தவரை GST – … Read more

இடைக்கால பட்ஜெட் தொடர்பாக பிரதமர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்…!!

இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்ய இருக்கும் சூழலில் பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்றது. இடைக்கால பொது பட்ஜெட் நாளைய தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரை அவையில் சுமூகமாக நடத்த இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி நடைபெற்றது. இன்று நடைபெற்ற அனைத்துகட்சிக்கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, திர்ணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் மத்திய அரசு இடைக்கால … Read more