#2019 RECAP: சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்டது முதல் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது வரை .!

  • கடந்த ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது.
  • செப்டம்பர் 7-ம் தேதி நிலவிலிருந்து 2.1 கி.மீ  தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

சந்திராயன்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் சந்திராயன் 2  தொழிநுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.இதன் பின்னர்  இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூலை 22  ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு  சந்திராயன் 2  விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது என  தெரிவித்தது.

கடந்த ஜூலை 22-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ஏவுகணை மூலமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திராயன்-2 கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் நேர்கோட்டில் பயணம் செய்தது.

Image result for விக்ரம் லேண்ட

இதை தொடர்ந்து  ஆகஸ்ட் 20-தேதி முதல் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்து  நிலவை  சுற்றி வந்தது. பின்னர் ஆகஸ்ட் 28-தேதி நான்கு கட்டம் உள்ள நிலையில் மூன்றாவது கட்டத்தை சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக எட்டியது என இஸ்ரோ தெரிவித்தது. அப்போது செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என கூறியுள்ளது.

பின்னர் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 2- ஆம் தேதி பிரக்யான் ரோவருடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது.

செப்டம்பர் 7- ஆம் தேதி நிலவை நெருங்கிய விக்ரம் லேண்டர் அதிகாலையில் நிலவில்  தரையிறக்க திட்டமிடப்பட்டது. எரிபொருள் உள்பட 1471 கிலோ எடையுள்ள விக்ரம் லேண்டருக்குள் பிரக்யான் ரோவர் இருந்தது. இந்திய நேரப்படி அதிகாலை 1.40 மணியளவில்   நிலவில் விக்ரம் லேண்டர் படிப்படியாக தரையிறங்க கட்டளை கொடுக்கப்பட்டது.

Image result for பிரக்யான் ரோவர்

ஆனால் எதிர்பாராத விதமாக நிலவிலிருந்து 2.1 கி.மீ தொலையில் விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர்  விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர்.

இதையடுத்து லேண்டரை  கண்டுபிடிக்கும் பணியில் இஸ்ரோவிற்கு நாசா உதவியது.  விக்ரம் லெண்டரின் பகங்கள் கண்டுபிடித்து நாசா புகைப்படங்களை வெளியிட்டது.இந்நிலையில் மதுரை சார்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் உள்ள கணினி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை வந்தார்.

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த மதுரை இளைஞர்..!

அவர் செப்டம்பர் 17 ,அக்டோபர் 14, 15, நவம்பர் 01-ம் ஆகிய தேதிகளில் நாசா தங்கள் செயற்கைக்கோள் மூலம்  எடுத்த புகைப்படங்களை  வெளியிட்டு வந்தது. அந்த புகைப்படங்களை சண்முக சுப்பிரமணியன்  ஆய்வு செய்ததில் விக்ரம் லேண்டரின் பாகங்களை இருப்பதாக கண்டுபிடித்தார்.

தான் கண்டுபிடித்ததை சுப்பிரமணியன் நாசாவுக்கு  மெயில் அனுப்பியுள்ளார். சுப்பிரமணியன் ஆய்வை நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்து சுப்பிரமணியனுக்கு  நன்றி தெரிவித்தனர்.

author avatar
murugan