Categories: இந்தியா

2019 தேர்தல்..இவர்தான் போட்டியிட வேண்டும் ! மோடி விருப்பம்..!

2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இவர்தான் போட்டியிட வேண்டும் என மோடி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த மக்களவை தேர்தலில் அத்வானி குஜராத், காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அதற்கு பின் கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார். அவர் எந்த விழாவிற்கு சென்ற போதும் பாஜகவினர் அவரை பெரிதாக மதிக்கவில்லை. மேலும் கட்சியிலும் அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் அளிக்கப்படவில்லை. அத்வானியை போலவே பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.

இந்நிலையில் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக சட்டசபை தேர்தலின் போது இது தளர்த்தப்பட்டு முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா அறிவிக்கப்பட்டார்.  இதையடுத்து சமீபத்தில் நடந்து முடிந்த கடந்த இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. மேலும் பல்வேறு காரணங்களால் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சி மற்றும் சிவ சேனா ஆகியவை பாஜகவுடன் இனி கூட்டணி  இல்லை என அறிவித்து விட்டன.

இநிலையில் டெல்லியில் அத்வானியை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் சந்தித்து  தேர்தலில் போட்டியிட கோரிக்கை விடுத்துள்ளனர். கடும் நெருக்கடியில் உள்ள  பாஜக, அத்வானி, மற்றும் ஜோஷி ஆகிய மூத்த தலைவர்கள் போட்டியிடும்போது வெற்றி வாய்ப்புகள் சாதகமாக இருப்பதால் தேர்தலில் போட்டியிட அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Dinasuvadu desk

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

6 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

8 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

10 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

11 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

11 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

11 hours ago