தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசுப் பள்ளிகள் வளர்ந்துள்ளது …!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

லோக் ஆயுக்தாவை கொண்டுவர திமுக எதையும் செய்யவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் அரசுப் பள்ளிகள் வளர்ந்துள்ளன.பள்ளிப் படிப்பை முடிக்கும் 100 மாணவர்களில் 49 பேர் கல்லூரி செல்கின்றனர்.லோக் ஆயுக்தாவை கொண்டுவர திமுக எதையும் செய்யவில்லை.பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள பொன்.மாணிக்கவேலுக்கு அரசு முழு ஒத் துழைப்பும், உதவியும் அளிக்கும் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி …!இன்று  விவாதித்து, இறுதி முடிவு தெரிவிக்கப்படும் …!ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்

உயர்மட்டக்குழுவில் இன்று  விவாதித்து, இறுதி முடிவு தெரிவிக்கப்படும் என்று   ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கர பெருமாள் போராட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்குதல், மேலும் ஊதிய முரண்பாட்டை நீக்குதல் மற்றும் அங்கன்வாடி, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய … Read more

கஜா பாதிப்புக்கு முதற்கட்ட நிவாரண நிதியை விடுவிக்கும் பணி நடக்கிறது…!மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

கஜா பாதிப்புக்கு முதற்கட்ட நிவாரண நிதியை விடுவிக்கும் பணி நடக்கிறது  என்று  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில்,  மாநில பேரிடர் நிதிக்கு மத்திய அரசின் பங்கான ரூ.353.70 கோடி கடந்த ஜூனில் விடுவிக்கப்பட்டது. தமிழ்நாடு மாநில பேரிடர் நிதிக்கு 90% விடுவிக்கப்பட்டது.நிலுவை தொகை ரூ.884.62 கோடி உள்ளது. கஜா பாதிப்புக்கு முதற்கட்ட நிவாரண நிதியை விடுவிக்கும் பணி நடக்கிறது என்றும்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.