பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதி , மதரீதியிலான பிரச்சனைகள் தலைதூக்கும்…! கனிமொழி

பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதி , மதரீதியிலான பிரச்சனைகள் தலைதூக்கும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கூறுகையில், பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதி , மதரீதியிலான பிரச்சனைகள் தலைதூக்கும்.சிறிய நடுத்தர தொழில்கள் நசுக்கப்படும், நாடு பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும். எனவே மத்தியில் ஆளும் பிஜேபி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அவர்களுக்குக் காவடி தூக்கும் அதிமுக ஆட்சியையும் தூக்கி எறியப்பட வேண்டும் அப்போதுதான் தந்தை பெரியாரின், தலைவர் … Read more

திருவாரூர் இடைத்ததேர்தல்: ஜனவரி  3ம் தேதிக்குள்  விண்ணப்ப படிவத்தை ஒப்படைக்க வேண்டும் ..!

ஜனவரி  3ம் தேதிக்குள் திருவாரூர் இடைத்ததேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்ப படிவத்தை ஒப்படைக்க வேண்டும் என்று திமுக  பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக  திமுக  பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில்,திருவாரூர் இடைத்ததேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை 3ம் தேதி மாலை 6 மணிக்குள் அண்ணா அறிவாலய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் .அன்பழகன் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். வேட்பாளருக்கான விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம்  என்றும்  திமுக  பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு … Read more

திருவாரூர் இடைத்தேர்தல்:இருவரின் வியூகம் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் …!அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

முதலமைச்சர், துணை முதலமைச்சரின் வியூகம், திருவாரூரில் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், முதலமைச்சர், துணை முதலமைச்சரின் வியூகம், திருவாரூரில் அதிமுகவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என்று … Read more

கமல்ஹாசன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து …!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ஆங்கிலேய புத்தாண்டு புதிய அரசியல் சுதந்திரத்திற்கான களமாகவும் தமிழர்களின் எழுச்சியாகவும் இருக்க வாழ்த்துகள். மக்கள் நீதி மய்யம் 2018ல் மாற்றத்திற்கான விதையினை விதைத்திருக்கிறது என்று  மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு மகேஷ்பாபுவின் மஹர்ஷி படத்தின் புதிய அப்டேட்!!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் பிரின்சஸ் மகேஷ்பாபு படம் வருகிறது என்றால் அவரது ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி தீரத்துவிடுவர். அந்தளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் மகர்ஷி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது. DINASUVADU

ஜெ.மரணம்:சிபிஐ விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்….!மு.க.ஸ்டாலின்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது என்பது உண்மை என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எங்களை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை.மருத்துவமனையில் ரூ 1 கோடிக்கும் மேல் உணவு சாப்பிட்டது யார்? ..மருத்துவமனையை உல்லாசவிடுதியாக்கி தங்கி ரூ.1 கோடிக்கு மேல் இட்லி, தோசை சாப்பிட்டது சசிகலா குடும்பம் .சசிகலா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா ஒதுக்கி வைத்திருந்தார். ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று … Read more

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்…! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்  என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ  அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். ஏற்கனவே அறிவித்த … Read more

புத்தாண்டை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாட நயன்தாரா எந்த நாட்டிற்கு பறந்து சென்றுள்ளார்?!

தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் காதலர்கள் என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தான். இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வருகின்றனர். ஒவ்வொரு பண்டிகையின் போதும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும் இவர்கள் இருவரும் வெளிநாட்டிற்கு ஓய்வு எடுக்க பறந்து சென்று விடுவர்.  அதே போல் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவான அய்ரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால், புத்தாண்டை கொண்டாட கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏன்ஜல்ஸிற்கு சென்றுள்ளனர். இதனை புகைப்படமெடுத்து தங்களது … Read more

ரிலீஸானது சிம்பு இசையில் ஓவியாவின் 90ml திரைப்படத்தின் பீர் & பிரியாணி பாடல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஓவியா. இவருக்கு ஓவியா ஆர்மி என ரசிகர்கள் இணையத்தில் தனி பட்டாளமே வைத்திருந்தனர். இவரது நடிப்பில் அடுத்ததாக 90ml எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை அழகிய அசுரா என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு க்ஷ தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சிம்பு இசையமைத்து வருகிறார். இவரது இசையில் பீர் & பிரியாணி எனும் பாடல் இன்று புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுடப்பட்டது. DINASUVADU

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம் …!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், பதவி ஏற்ற உடனேயே அவர் செய்துள்ள நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக பதிவாளர் திடீரென்று ராஜினாமா செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்  மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.