ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே சாதனை படைக்கும் சர்க்கார்…!!!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது தளபதி தான். இவர் தற்போது நடித்து சர்கார் பல தடைகளை தாண்டி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், சர்க்கார் பட 80 நாடுகளில் திரையிடப்படுகிறதாம். முதல்முறையாக தமிழ் படம் 80 நாடுகளில் திரையிடப்படுவது இது தான் முதல் முறை. மேலும் இது 3000 திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடங்கியது தீபாவளி முன்பதிவு…!!

தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது. தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக 20000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று சென்னையில் தொடங்கி  வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் 11,367 சிறப்பு பேருந்துகள், மற்ற மாவட்டங்களில் இருந்து 9,200 பேருந்துகள் என 20,567 சிறப்பு பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்காக … Read more

மத்திய அரசுடன் மோதிய ரிசர்வ் வங்கியின் ஆளுனர்… பதவி விலகலா..?

மத்திய அரசுடன் மோதல் அதிகரித்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் உர்ஜித் படேல் பதவி விலக தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் தொழிலதிபர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கித் துணை ஆளுநர் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடுவது பொருளாதாரப் பேரழிவுக்கு வித்திடும் எனத் தெரிவித்தார். 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுக் கடன் வழங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது. இதைக் கருத்திற்கொண்டே ஆச்சார்யா … Read more

மர்ம காய்ச்சலால் மீனவர் பலி…!!!

குமரி மாவட்டம் வாவத்துறையை சேர்ந்தவர் ரமேஷ் (45). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த இரு நாட்களாக காய்ச்சல் காரணமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தளபதிக்கு எதிராக மீண்டும் வெடிக்கும் சர்ச்சை…!!!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக தளபதி விஜய் வளம் வருகிறார். ஒவ்வொரு வருடமும் இவரது படம் திரையிடப்படுவதற்கு முன்பு பல பிரச்சனைகளை தாண்டி தான் படம் திரையிடப்படுகிறது. இந்நிலையில் தற்போது தான் சர்க்கார் கதை என்னுடையது என்று கொடுத்த புகாரில் கோர்ட் தீர்ப்பு வழங்கி அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக கத்தி படத்தின் கதை என்னுடையது என்று நீதி கேட்டு உதவி இயக்குனர் ஒருவர் குடும்பத்துடன் உண்ணாவிரதம் தொடங்கியுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் … Read more

உலக கோப்பை_ க்கு டோனி கட்டாயம் தேவை…கவாஸ்கர் கருத்து..!!

2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு டோனி கட்டாயம் தேவை என கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘டோனியின் அனுபவமும், ஆலோசனைகளும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு தேவைப்படுகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு டோனி கட்டாயம் தேவை. ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை களம் கண்ட உடனே அதிரடி காட்ட வேண்டும் என்பதில்லை. டோனி களம் … Read more

கேரளாவுக்கு வாருங்கள்…இந்திய கேப்டன் கோலி அழைப்பு…!!

கேரளா வெள்ள பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டு விட்டதாகவும், எனவே மக்கள் முன்பு போல வருமாறு விராட் கோலி பரிந்துரைத்துள்ளார். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை(நாளை) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் கோவளத்தில் உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளனர். பீச் ரிசார்ட்டில் உள்ள விருந்தினர் பக்கத்தில் விராட் கோலி குறிப்பு ஒன்றை எழுதினார். அதில், ”கேரளாவில் இருப்பது பேரின்பம். இங்கு வருவதை விரும்புகிறேன். … Read more

MeToo-வில் சிக்கும் முதல்வர்…எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி…!!

‘மீடூ‘ இயக்கத்தில் குமாரசாமி விரைவில் சிக்குவார் என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து பேசுவார்கள் என்றும் குமார் பங்காரப்பா பரபரப்பு தகவலை வெளியிட்டார். பா.ஜனதா கட்சியை சேர்ந்த குமார் பங்காரப்பா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ‘மீடூ‘ இயக்கம் மூலம் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இது பெண்கள், ஆண்கள் என இருவருக்கும் பொருந்தும். இந்த ‘மீடூ‘ இயக்கத்தில் குமாரசாமி விரைவில் சிக்குவார். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் … Read more

பாகனை கொன்ற மசினி யானையை மீண்டும் முதுமலை அனுப்ப உத்தரவிட்டுள்ளது ஐகோர்ட்…!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு மசினி என்ற யானை தனது பாகனை கொன்றுள்ளது. இந்நிலையில் பாகனை கொன்ற யானையை முதுமலை அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு மசினி யானையை அனுப்ப உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நாளை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை…சென்னை வானிலை மையம்…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இன்று சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்தது. பொன்னேரி, செங்குன்றம், புழல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்  மிதமான மழை பெய்தது. இன்று சென்னை  வானிலைமைய இயக்குனர்  பாலசந்திரன் கூறும் போது   தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி  நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்; … Read more