இயக்குனராக அறிமுகமாகிய பிரபல தமிழ் நடிகர்…!!

ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் நடிகர் மாதவன். 1990-களில் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். அதில் தன் பணியை இழந்து, சிறைவாசமும் அனுபவித்தார். சமீபத்தில் இந்த வழக்கில் அவர் நிரபராதி என்று விடுக்கப்பட்டார்.இவரது வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு படம் உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதில் நம்பி நாராயணனாக நடிக்க இருப்பதாக மாதவனும் உறுதிப்படுத்தினார். இப்படத்தின் டீஸர் இன்று (அக்டோபர் 31) வெளியிடப்பட்டது. … Read more

இந்திய கிரிக்கெட்_க்கு பேராபத்து..சவுரவ் கங்குலி எச்சரிக்கை..!!

தற்போதைய பிசிசிஐ நிர்வாகத்தின் கீழ் இந்திய கிரிக்கெட்டின் புகழுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் இந்திய கேப்டனும் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவருமான சவுரவ் கங்குலி எச்சரிக்கை மணி ஒலித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்ட விதம் முதல் ராகுல் ஜோஹ்ரியின் மீடூ பாலியல் சர்ச்சை வரை வெளிப்படையாக அதில் தெரிவித்துள்ளதகா ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட்டச்சூழ்நிலைமைகளை … Read more

சர்கார் படத்துக்கு தடை….இயக்குனர் உண்ணாவிரதம்….!!

முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படத்திற்கு தடைகேட்டு குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.அன்பு ராஜசேகர் தஞ்சை விவசாயிகளின் நிலை குறித்த ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை கடந்த 2013-ம் ஆண்டு இயக்கியதாகவும், அதனை முறையாக பதிவும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் உண்ணாவிரதம் குறித்து அன்பு ராஜசேகர் கூறுகையில், ”ட்விட்டர் கணக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், உதவி இயக்குநர் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து எனது ‘தாகபூமி’ குறும்படத்தை அவருக்கு அனுப்பினேன். அதைப் பயன்படுத்திக்கொண்ட முருகதாஸ் … Read more

படேல் சிலையில் என்னென்ன சிறப்பு அம்சங்கள்..!!

உலகிலேயே உயரமான சர்தார் வல்லபாய் படேல் சிலையின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா? உயரம்: 182 மீட்டர் (நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலையைக் காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு உயரமானது) இடம்:  நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் சுமார் 3.5 கி.மீ. சுற்றளவு. மதிப்பு: ரூ.2,989 கோடி (தோராயமாக) சிற்பி: 93 வயதான பத்ம பூஷண் விருது பெற்ற பிரபல சிற்பி வி.சுதர் கட்டுமான காலம்: 2 வருடங்கள், 10 மாதங்கள் (2015, … Read more

செருப்பால் அடித்துக்கொண்ட நடிகரின் மனைவிமார்கள்…!!

பிரபல கன்னட நடிகரின் மனைவிகளுக்கிடையே ஏற்பட்ட குடும்ப சண்டை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. கன்னட நடிகர் துனியா விஜய்யின் முதல் மனைவி நாகரத்னா மகள்களுடன் தனியாக வசித்தார்.2016ல் மாடல் அழகி கீர்த்தி கவுடாவுடன் துனியா விஜய்க்கு காதல் ஏற்பட்டு 2-வது திருமணம் செய்து கொண்டு அவருடனேயே வசித்து வருகிறார். 2 மனைவிகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் கீர்த்தி கவுடா வீட்டுக்கு மகளுடன் நேரில் சென்று முதல் மனைவி நாகரத்னா, ஒருவரை ஒருவர் கடுமையாக … Read more

ஈரமான முடியுடன்…குளியலறையில் கட்டிப்பிடித்து….MeToo_வில் சிக்கும் அப்பா வயது நடிகர்..!!

குளியல் அறையில் வைத்து அப்பா வயது நடிகர் கட்டிப்பிடிக்க முயன்றதாக புதுமுக நடிகை பிரெர்னா கண்ணா புகார் தெரிவித்துள்ளார். ‘வேறென்ன வேண்டும்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரெர்னா கண்ணா.தெலுங்கு நடிகையான இவர் மீ டூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். படம் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வரத் … Read more

சபரிமலையில் பெண்களுக்கு தனி கோவில்….நடிகர் பேச்சு…!!

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அருகே பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக புதிய கோயில் கட்டத்தயாராக இருப்பதாக நடிகர் சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார்.  கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் திறப்புவிழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகரும் எம்பியுமான சுரேஷ்கோபி பேசும்போது, ’சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் அருகே பெண்கள் மட்டும் வழிபடுவதற்காக புதிய கோயில் கட்டத்தயாராக இருக்கிறேன். காணிக்கைக்கான உண்டியல்கள் இல்லாத வகையில் புதிய கோயிலை அமைக்கும் திட்டம் என் மனதில் உள்ளது. இதற்கான விளம்பரம் விரைவில் வெளியாகும். மத்திய அரசோ, … Read more

சிறுமிக்கு பாலியல்…பள்ளி முதல்வருக்கு 108 ஆண்டு ஜெயில்….!!

பாகிஸ்தான் பள்ளியில் 18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பள்ளி முதல்வருக்கு 105 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.  பாகிஸ்தானில் பெஷாவரை சேர்ந்தவர் அத்தாவுல்லா மார்வத். இவர் அங்கு ஒரு பள்ளி நடத்தி வருகிறார். அதில் முதல்வராகவும் பணிபுரிகிறார். இவர் அங்கு படிக்கும் சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்து வந்தார்.18 வயதுக்குட்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை ரகசியமாக வீடியோ எடுத்தார். அதை தொடர்ந்து அவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி … Read more

மலேரியா நோயை கண்டுபிடிக்கும் நாய்…விஞ்ஞானிகள் அதிரடி கண்டுபிடிப்பு…!!

நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மலேரியாவுக்கு ஆண்டு தோறும் 4 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணம் அடைந்து வருகின்றனர். கொசுக்களால் பரவும் இந்த நோய் ஒரு சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி எதுவும் இன்றி தாக்குகிறது.இந்த நோய் தாக்கியுள்ளதா என்பதை ரத்த பரிசோதனை மூலமே கண்டறிய முடியும். இந்த நிலையில் நாய்களின் மோப்ப சக்தி மூலம் மலேரியா நோயை கண்டுபிடிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் காலுறையை … Read more

ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து…25 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விழுந்து விபத்து நேரிட்டதில் 25 பேர் உயிரிழந்தனர். ப்ராக் மாகாணத்திலிருந்து ஹீராட் மாகாணம் நோக்கி சென்ற ராணுவ ஹெலிகாப்டர் அனார் தாராவில் உள்ள மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. மோசமான வானிலை நிலவிய போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த கமாண்டர்கள், வீரர்கள் மற்றும் இரு பெண்கள் என மொத்தம் 25 பேரும் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதமும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று … Read more