தமிழக மீனவர்  கேரளாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கடலில் தவறி விழுந்து பலி …!

தமிழக மீனவர்  கேரளாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் .ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சீதாங்குண்டம் பகுதியை சேர்ந்த மீனவர் அந்தோணி உயிரிழந்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு தடைக்கு…!இன்று விசாரணை …!

இன்று  அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு தடைக்கு எதிரான சிபிஎஸ்இ மேல்முறையீட்டு மனு மீது விசாரணைக்கு வருகின்றது. நாக்பூர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 குரூப் 4 தேர்வுதான் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு!  டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்

குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து  டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் அறிவிப்பு ஓன்று தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 17 லட்சத்திற்கும் அதிகமானோர் குரூப் 4 தேர்வை  எழுதியுள்ளனர்.இதுதான் நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு. ஆகஸ்ட் 30வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இன்று தொடங்குகிறது இந்தியா -இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் !

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருபது ஓவர் ,ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்றது.இருபது ஓவர் போட்டியை இந்திய அணி 1-2 என்ற கணக்கிலும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது. இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.அந்த போட்டி சமனில் முடிந்தது. இந்திய அணியை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சை விட சுழல் பந்து வீச்சுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் … Read more

எனக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை!டிடிவி .தினகரன்

தனது வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு தனிப்பட்ட விரோதிகள் யாரும் இல்லை. அரசியல் விரோதிகள் யாரேனும் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் .ஏதோ ஒரு வெடிபொருளை வைத்துதான் அதன் மீது பெட்ரோல் ஊற்றி எறித்தனர் என்று கூறியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பல்வேறு துயரசம்பவங்களில் உயிரிழந்த 16பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3லட்சம் நிதி ! முதலைமைச்சர் பழனிசாமி உத்தரவு !

பல்வேறு துயரசம்பவங்களில் தமிழகத்தில் உயிரிழந்த 16பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3லட்சம் நிதி வழங்க முதலைமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர்,அரியலூர்,திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 16பேர் பலியாகியுள்ளனர். மின்சாரம்தாக்கி உயிரிழந்த 15 பேர்,பாம்பு கடித்துஉயிரிழந்த ஒருவரது குடும்பத்துக்கு முதலைமைச்சர் பழனிசாமி நிதி வழங்கி  உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 மேட்டூர் அணையில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தம் …!

சேலத்தில் உள்ள மேட்டூர் அணையில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டது. 16 கண் மதகு வழியே மேட்டூர் அணையில் திறக்கப்பட்டு வந்த உபரி நீர் நிறுத்தப்பட்டது. நீர்வரத்து 23,501 கன அடியில் இருந்து 19,000 கன அடியாக குறைந்ததால் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதியை கலர் டிவி ஊழல் வழக்கில் இருந்து விடுவித்தது சரியே1 உயர்நீதிமன்றம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதியை கலர் டிவி ஊழல் வழக்கில் இருந்து விடுவித்தது சரியே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ள்ளது. 1991ல் செல்வகணபதி அமைச்சராக இருந்தபோது கிராம பஞ்சாயத்துகளுக்கு கலர் டிவி வாங்கியதில் ஊழல் என்று வழக்கு தொடரப்பட்டது.பின்னர் விசாரித்த நீதிமன்றம்  விடுதலையை எதிர்த்து சிபிஐ தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது .மேலும்  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதியை கலர் டிவி ஊழல் வழக்கில் இருந்து விடுவித்தது சரியே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை !மத்திய அரசு

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அரசு கூறுகையில், சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

இன்று பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு …!

இன்று  பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றது. இன்று  பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை http://www.dge.tn.nic.in இல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.