நீட்- கூடுதல் மதிப்பெண்: உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி.கே. ரெங்கராஜன் கேவியட் மனு தாக்கல்!

உச்சநீதிமன்றத்தில்  நீட்- கூடுதல் மதிப்பெண் உத்தரவு விவகாரத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார் மனுதாரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பியுமான   டி.கே. ரெங்கராஜன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி.கே. ரெங்கராஜன்,உச்சநீதிமன்றத்தில் தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கக்கோரும் வழக்கில்  கேவியட் மனு தாக்கல் செய்தார்.உச்சநீதிமன்றத்தை சிபிஎஸ்இ அணுகினால் தங்களின் கருத்தை கேட்காமல் உத்தரவிடக்கூடாது என்று அவர் மனுவில் கூறியுள்ளார்.

தமிழில் நீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.