தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மே 22 மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார்?

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தன்று மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார்? என்று  உயர்நீதிமன்ற மதுரை  கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை  கிளையில் விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை  கிளை,என்ன வகையான துப்பாக்கிகள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில்  பயன்படுத்தப்பட்டன?தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றிருந்தார்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

வரும் 18ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வீடியோ ஆதாரங்களை  தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டுள்ளது.  99 நாட்கள் நடந்த போராட்டம் தொடர்பான உளவுப் பிரிவு போலீஸ் அறிக்கையையும் தாக்கல் செய்ய ஆணை  பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.