தாய்லாந்தில் குகையில் சிக்கித்தவிக்கும் சிறுவர்களில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!

தாய்லாந்தில் குகையில் சிக்கித்தவிக்கும் சிறுவர்களில் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 23 ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங்க் குகைக்கு கால்பந்தாட்ட அணி சிறுவர்கள் தங்கள் பயிற்சியாளருடன் சாகச பயணம் மேற்கொண்டனர்.பின்னர் அங்கு கனமழை காரணமாக குகைக்குள் வெள்ளம் சூழ்ந்தது.

பின்னர் விவரம் அறிந்த மீட்புப் படையினர் குகைக்கு சென்று சிறுவர்களை மீட்க்கும் பணியில் இறங்கினர்.கடந்த 2 ஆம் தேதி சிறுவர்களை கண்டுபிடித்தனர்.தொடர்ந்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக களமிறங்கினர்.

தொடர்ந்து 13 நாட்களுக்கு மேலாக குகைக்குள் சிக்கித்தவித்து வருகின்றனர்.இந்நிலையில் குகையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி இன்று காலை தொடங்கியது. சிறுவர்களை மீட்க 18 பேர் கொண்ட மீட்புப்படை குழுவினர் கயிறுக்கட்டி குகையினுள் சென்றனர். குகையில் சிக்கியுள்ள சிறுவர்களில் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் .4 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டு முகாமுக்கு அழைத்துச் சென்றனர்

மேலும் மற்ற சிறுவர்களையும்,பயிற்சியாளர்களையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.தாய்லாந்தில் கடற்படை வீரர்கள்,வெளிநாட்டு நீச்சல் வீரர்கள் மீட்பு பணியிலும் முதலுதவியிலும் ஈடுபட்டனர்.பின்னர் மீட்ப்புப்பணி 10 மணிநேரத்துக்கு பின்னர் நடைபெறும் என்று அறிவித்தனர்.

அதன் பின்னர் தொடங்கிய குகையில் இருந்து நேற்று 4 சிறுவர்களை மீட்புப்படையினர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது.இதை அங்கு உள்ள கடற்படை அதிகாரியே உறுதி செய்துள்ளார்.இன்று மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடங்கியது.

இந்நிலையில் குகையில் சிக்கித்தவிக்கும் சிறுவர்களில் தற்போது வரை மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 11வது சிறுவனும் மீட்கப்பட்ட நிலையில் பயிற்சியாளரையும் மற்றொரு சிறுவனையும் மீட்க மீட்புக்குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.