உருக்குலைந்த ஜப்பான்..!கனமழையால் 141 பேர்உயிரிழப்பு ..!பலர் மாயம்

வரலாறு காணத அளவிற்கு ஜப்பானில் கனமழையால் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக ஜப்பான் நாட்டில் மிகவும் கனமழை பெய்து வருகின்றது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக ஜப்பானில் உள்ள ஒக்கயாமா,எகிமா குரோஷிமா,கியோட்டா ஆகிய மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது.சுமார் 16 அடிக்கும் மேல் மக்கள் வசிக்கும் இடங்களில் வெள்ள நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

Related image

இதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.மேலும் மழை வெள்ளத்தாலும்,மண்சரிவினாலும் 141 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.மேலும் பலர் காணமல் போயுள்ளனர்.இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.