ரஷ்யா அணி உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஐந்துக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தியது.

இரவு 8.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதின. அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சவுதி அரேபிய இளவரசர் மொகமது பின் சல்மான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு, போட்டியை கண்டு ரசித்தனர். போட்டி தொடங்கிய 12வது நிமிடத்தில், ரஷ்ய அணியின் கசின்ஸ்கீ, முதல் கோலை அடித்து, கணக்கைத் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து, ரஷ்ய அணி வீரர்கள், 43வது நிமிடத்திலும், 71வது நிமிடத்திலும் என அடுத்தடுத்து கோல்களை அடித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். எவ்வளவோ முயன்றும், சவுதி அரேபிய அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாததால், இறுதியில் 5க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில், ரஷ்ய அணி வெற்றியைக் கைப்பற்றியது.