மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், பதவி ஏற்ற உடனேயே அவர் செய்துள்ள நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்கலைக்கழக பதிவாளர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் 10 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தனர். அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர்.

Image result for மதுரை காமராஜ் இந்த பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறிக்கை விட்டனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு 3 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்க தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், நேர்காணல் நடத்தினார். அதில், அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு அரசு பரிந்துரை செய்த 3 பேரையும் கவர்னர் நிராகரித்தார். சென்னை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக துரைசாமி, காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு செல்லத்துரை ஆகியோரை நியமித்து கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். ஆனால், அதில் செல்லத்துரை நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.Image result for துணைவேந்தர் செல்லத்துரை

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்யாணி மதிவாணன் பணியாற்றினார். அப்போது
பேராசிரியர்கள், அலுவலர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக அப்போதைய பல்கலைக்கழக பாதுகாப்பு குழு தலைவர் சீனிவாசன், தமிழக கவர்னருக்கு புகார் அனுப்பினார். இதனால் கல்யாணி மதிவாணன், தற்போது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லத்துரை உள்ளிட்ட சிலர், கூலிப்படை மூலம் சீனிவாசனை தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த தாக்குதலில் சீனிவாசன் தலையில் பலத்த காயமடைந்தார். கை எலும்பும் முறிந்தது. இதுகுறித்த புகாரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் முதல் குற்றவாளியாக கல்யாணி மதிவாணன், மூன்றாவது குற்றவாளியாக செல்லத்துரை உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்தனர். இவ்வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி சீனிவாசன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக செல்லத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இது பல்வேறு தரப்பிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்லத்துரை நியமனத்தை எதிர்த்து மதுரையின் பல்வேறு இடங்களிலும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Image result for துணைவேந்தர் செல்லத்துரை

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன் கூறுகையில், ‘‘துணைவேந்தர் பதவிக்குரிய தகுதிகள் செல்லத்துரைக்கு இல்லை. யூஜிசி விதிப்படி 10 ஆண்டு பேராசிரியர் பணி அனுபவம் இருக்க வேண்டும். ஆனால், போதிய அனுபவம் இல்லை. எந்த அடிப்படையில் துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறித்து தேர்வு குழு விளக்கமளிக்க வேண்டும்.

துணைவேந்தர் நியமனம் நேர்மையான முறையில் நடக்கவில்லை. நியமிக்கப்பட்டவுடன் இரவோடுஇரவாக ெபாறுப்பேற்றுள்ளார். இதிலிருந்து ஏதோ அவசரம் தெரிகிறது. இது மட்டுமின்றி எந்தவித நடைமுறைகளையும் பின்பற்றாமல் பல முக்கிய பணி இடங்களும் உடனடியாக நிரப்பப்பட்டுள்ளன. எனவே, இந்த நியமனத்தை தமிழக கவர்னர் மறுபரிசீலனை செய்து, ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நியமனத்தை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
Image result for உயர்நீதிமன்றம்

இதுகுறித்து இன்று உயரநீதிமன்ற தலைமை இந்திரா பானர்ஜி முன்பு வந்த அமர்வில் மதுரை பல்கலைகழக துணைவேந்தராக செல்லதுரையை  நியமித்தது செல்லாது என்று அறிவித்தார்.

புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க அமைக்கப்பட குழு முடிவு செய்த பின்னர் புதிய துணை வேந்தர் நியமிக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.