அமெரிக்காவின் மினெஸ்சோட்டா மாகணத்தில் உள்ள யுபிஎஸ் பிளாசா பில்டிங்கில் நேற்று ரக்கூன் ஒன்று மேலே ஏற முயன்றது. 25 மாடி கட்டிடத்தில் ஏறிய ரக்கூனை அனைவரும் கண்டு ரசித்தனர்.

அது மாடியில் ஏறும் போது பல இடங்களில் அமர்ந்து ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் தொடர்ந்து ஏறியது. இரவில் அனைவரும் தூங்கிய பின் ரக்கூன் மொட்டை மாடியை வந்தடைந்தது. ரக்கூன் ஏற தொடங்கியது முதல் மக்கள் அதனை கண்காணிக்க தொடங்கினர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அவர்கள் மாடியில் இருந்த ரக்கூனை பத்திரமாக மீட்டனர். ரக்கூன் ஏறிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் ஒரே இரவில் அந்த ரக்கூன் சமூக ஊடகங்களில் பிரபலமானது