தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம் என்று என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.தங்கத் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர் கூறிகையில்,எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நான் மட்டும் மேல்முறையீடு செய்யமாட்டேன். நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது; நீதிமன்றத்தை மதிக்கிறோம்  என்றும் தெரிவித்துள்ளார்.இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயாராக உள்ளோம். இடைத்தேர்தலில் 18 பேரில் ஒருவர் வெற்றிபெறாவிட்டாலும் மற்ற 17 பேரும் ராஜினாமா செய்வோம் அந்த அளவிற்கு ஒற்றுமையாக உள்ளோம்.தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க முடியவில்லை. கட்சி தாவல் அடிப்படையில் எங்களை தகுதிநீக்கம் செய்யவில்லை. 18 பேரும் மீண்டும் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இன்று  டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.