18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளித்துள்ளனர்.

காலையில் 6 வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகு 7வது வழக்காக தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இத்தீர்ப்பில் கூறியிருப்பதாவது;

உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறும் போது 18 MLA க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று அறிவித்தார். Image result for இந்திரா பானர்ஜி

பின்னர் நீதிபதி சுந்தர் அறிவிக்கும் போது  18 MLA க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று அறிவித்தார்.

மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறும் போது இதற்கான இடைதேர்தல் நடத்தக்கூடாது என்ற இடைக்காலத்தடை தொடரும் மேலும் இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார்.