தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடிவிட்டதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணை தெளிவில்லை எனவும், புதிய அரசாணை வெளியிட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Image result for ஸ்டெர்லைட் அரசாணைகடந்த மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான, தூத்துக்குடி மக்களின் 100 வது நாள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Image result for ஸ்டெர்லைட் அரசாணைமாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதியாக பேரணியாக சென்ற போது, அம்மக்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அந்த பேரணி கலவரமாக மாறவே போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

Image result for ஸ்டெர்லைட் அரசாணைஇதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பனி வழங்கவும் உதவிட்டார்.

Image result for ஸ்டெர்லைட் அரசாணைஇந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் தெளிவில்லை என வழக்கறிஞர் வைகோ உள்ளிட்டோர் மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனுவை சற்றுமுன் விசாரணை செய்த நீதிபதிகள், ”ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் தெளிவில்லை எனவும், ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக கொளகை ரீதியிலான முடிவெடுத்து புதிய அரசாணை வெளியட வேண்டும் என உத்தரவிரட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.