வாசனை திரவம் தயாரிக்கும் கம்பெனியில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

பஞ்சனம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான லவ்லி ஆரோமேடிக்ஸ் என்ற வாசனை திரவம் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல பணிகளை முடித்து விட்டு ஊழியர்கள் வீடு திரும்பிய நிலையில், நிறுவனத்தில் திடீர் என்று பிடித்த தீ மளமளவென கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். மின்கம்பியில் இருந்து விழுந்த நெருப்புப்பொறியே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. தீயில் எரிந்து போன பொருட்களின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.