‘இறுதிச்சுற்று’ படத்திற்குப் பிறகு மாதவனுக்கு தமிழ், இந்தி மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவரது நடிப்பில் உருவான ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதில் மாதவனுடன் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இவர்களின் கெமிஸ்ட்ரி இப்படத்தில் அதிகம் பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் புதிய படம் மூலம் இணைய இருக்கிறது.
மாதவன் அடுத்ததாக ‘மாறா’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அறிமுக இயக்குனர் திலிப் குமார் இயக்கும் இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 18ம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் மாதவனுடன் இணைந்து நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியிருக்கிறார்.