புதுவை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 44). பொதுப்பணித்துறை ஊழியர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை அண்ணா சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டபோது அதற்கான பணத்தை தரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இளங்கோவன் நேற்று அதே ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது ஓட்டல் உரிமையாளர் ரவிச்சந்திரன் (54). முன்பு ஓட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காதது குறித்து தட்டிக்கேட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் ரவிச்சந்திரன் பொதுப்பணித்துறை ஊழியர் இளங்கோவனை சரமாரியாக தாக்கினார்.

இதில், இளங்கோவனுக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

பின்னர் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் ரவிச்சந்திரனை கைது செய்தனர்