பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் சொந்தியா கிராமத்தின் வழியாக ஒரு குடும்பத்தினர் பைக்கில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த்னர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த 20 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தது. அந்த கும்பல் தந்தையை அங்குள்ள மரத்தில் கட்டிப்போட்டு விட்டு, தாயையும், மகளையும் பாலியல் பலாத்காரம் செய்தது.
இதுதொடர்பான புகாரை பெற்ற கோஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், அந்த பகுதி வழியாக சென்ற கல்லூரி மாணவர்களிடம் அந்த கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த கும்பலை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்