ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் பத்திரிகை செயல்பட்டு வருகிறது. இதன் ஆசிரியராக இருந்தவர் ஷுஜாத் புகாரி.
இன்று மாலை ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கலந்து கொண்டு திரும்பினார். அப்போது அவரை  வழிமறித்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார், அவரது பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
இதையடுத்து, அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது பாதுகாவலர்களில் ஒருவரும் இறந்தார்.
பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு முதல் மந்திரி மெகபூபா முப்தி கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவித்துள்ளார்.