எஸ்எஸ்எல் கொல்கத்தா என்ற சரக்குக் கப்பலில் நடுக்கடலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்ட நிலையில்  இருந்த 22 பேரும் மீட்கப்பட்டனர்.

நடுக்கடலில் சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடலோரக் காவல்படைக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கு வங்கத்தின் ஹால்டியா பகுதியிலிருந்து ராஜ்கிரண் என்ற கப்பலும், டார்னியர் கப்பலும் மீட்புக்கு விரைந்தன.கடலுக்கு நடுவே பற்றி எரியும் தீ, அதிக உயரத்துக்குப் புகையைக் கக்கி வருகிறது.

மீட்புப் பணிக்காக சம்பவ இடத்துக்கு ஹெலிகாப்டரும் விரைந்துள்ளது. கடல் கொந்தளிப்பு, மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் கப்பலில் உள்ள 22 பேர் கொண்ட குழுவில் முதற்கட்டமாக 11 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். இதையடுத்து நீண்ட போராட்டத்துக்குப் பின் எஞ்சியிருந்த 11 பேரும் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டனர்.