சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை நிதி மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்,விருதுநகர், ராமநாதபுரத்தில் என்.எல்.சி. சார்பில் அமைக்கப்பட்டுள்ள  நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்துக்கு அவர் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், 300 மெகவாட் சூரிய ஒளி மின் நிலையங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 41காசுகள் என்ற விலையில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

என்எல்சி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு ரயில் மூலம் நிலக்கரி எடுத்த செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.