தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் ரத்துக்கு காரணமான திமுக, அதிமுக வேட்பாளர்களிடம் இருந்து செலவை வசூலிக்க கோரிய வழக்கு தள்ளுபடி என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்களிடம் பணம் வசூல் செய்ய சட்டத்தில் இடமில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக  அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி தஞ்சை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி, திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி ஆகியோரின் வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரிகள் ஏற்க கூடாது. இதற்கு உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததால் இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் அந்த வேட்பாளர்கள் போட்டியிடுகிறர்கள்.  அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணையை முடிக்கும் வரை  அவர்களின் வேட்பு மனுக்களை ஏற்க கூடாது என  கூறியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.