வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் கிராஸ் ஐஸ்லெட்டில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் விரும்புகிறது. அதேநேரத்தில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலும் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சொந்த மண்ணில் கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வங்காள தேசத்திற்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு டெஸ்டில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது கிடையாது. தற்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.