அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று கோவா வரவுள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதற்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மும்பை லீலாவதி மருத்துவமனையிலும் 3 முறை சிகிச்சை பெற்றார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறைவுற்றுள்ளது. 3 மாதங்களுக்கும் மேலாக அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இன்று பனாஜிக்கு வரவுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜூன் 15-ம் தேதி மனோகர் பாரிக்கர் அமைச்சர்களைச் சந்தித்து இதுவரை நடந்த அலுவல்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். – ஐஏஎன்எஸ்