ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள பரூக்காபாத்துக்கு நேற்று பஸ் ஒன்று 70 பயணிகளுடன் சென்றது. அதிகாலை 5.30 மணியளவில் உ.பி.யின் மெயின்புரி மாவட்டம் திரத்பூர் என்ற கிராமம் அருகே சென்றபோது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் பெண் உட்பட 17 பேர் இறந்தனர்.

காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடாக தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.