உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.

இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று தொடங்குகிறது. இது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதனை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதே போல் ஒடிசா மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக மணற்சிற்பம் ஒன்றை வடித்துள்ளார். இது பார்வையாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.