வருகின்ற 14 ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வழக்கு குறித்து தீர்ப்பு வரும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த மாதம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.

ஆனால் எப்போது என்று உறுதியான தகவல்கள் கிடைக்காமல் இருந்தன. இந்நிலையில் தமிழகமே எதிர்பார்த்திருக்கும் இந்த வழக்கு நாளை  தீர்ப்பு வரும் என்பதால் இப்போதிலிருந்தே பதற்றம் தொற்றி கொண்டுள்ளது. தினகரனின் அரசியல் பயணத்திற்கு இந்த வழக்கில் வரும் தீர்ப்பே முக்கிய பங்களிக்கும் என கருதப்படுகிறது.

Image result for உயர்நீதிமன்றம்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மீண்டும் பதவியை பெற்றால் தமிழக அரசே கவிழும் நிலைக்கு கூட வரலாம். அதனால் அனைத்து தரப்பும் இந்த வழக்கு தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.Image result for தமிழக அரசு