ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் இனியன் (வயது 25). இவரது வீட்டில் வெடி குண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேத்தூர் புறநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் இனியன் வீட்டுக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாஸ்பரஸ் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இனியன் என்ன காரணத்திற்காக வீட்டில் இவற்றை பதுக்கி வைத்திருந்தார்? ஏதேனும் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டாரா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.