டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்னும் சில நாட்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

93 வயதாகும் வாஜ்பாய் சிறுநீரகத் தொற்று பாதிப்பு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 5 மூத்த மருத்துவர்கள் கொண்ட குழு அவரின் உடல்நிலையைக் கண்காணித்து வருகிறது.

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று வாஜ்பாயின் நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர்களான மன்மோகன்சிங், தேவ கவுடா ஆகியோரும், மத்திய அமைச்சர்கள் பலரும் நேற்று வாஜ்பாய் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தனர். இதே போல் அதிமுக எம்பியும் மக்களவைத் துணைத் தலைவருமான தம்பிதுரையும் வாஜ்பாயின் நலம் விசாரித்தார்