முன்னாள் மத்திய அமைச்சர் லாலுபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான கட்டி முடிக்கப்படாத வர்த்தக வளாகம், நிலம் உள்ளிட்ட 45 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் லாலு பிரசாத் யாதவ் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ளார்.இந்நிலையில் பாட்னாவில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையை அடுத்து கணக்கில் வராத லாலுவின் 45 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கையகப்படுத்தினர். அண்மையில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி கணக்கில் வராத சொத்துகளை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.