மேற்கு வங்கத்தில் பெய்த கனமழையின்போது, மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்கம், சத்தீஸ்கர், அசாம், மேகாலயா உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போது பலத்த மழை கொட்டி வருகிறது. மிசோரம் மாநிலத்தில் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இடிமின்னலுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், பங்குரா, ஹூக்ளி, மேற்கு மிட்னாப்பூர், பிர்பும் (Bankura, Hooghly,West Midnapore, Birbhum ) ஆகிய மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில், 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கடுமையான மின்னல் தாக்குதலில் காயமுற்றனர். இதனிடையே, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பீகார், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் புழுதிப் புயல் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.