திரிபுராவில் முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்காரின் காரை மறித்து பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தியதால், அவர் திரும்பிச் சென்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாணிக் சர்க்கார், நேற்று தலாய் ((dhalai)) மாவட்டத்தில் ஒரு மலைகிராமத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றார். ஆனால், அவர் அங்கு செல்ல எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், மாணிக் சர்க்காரின் பாதுகாப்பு அதிகாரிகளின் காரை வழிமறித்தனர்.

கொட்டும் மழையிலும், மாணிக் சர்க்காரை தடுத்து நிறுத்தும்வகையில் முழக்கங்களை எழுப்பியவாறே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுரையின்பேரில் மாணிக் சர்க்கார் அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று.