தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் விண்ணப்பங்கள் நேரடியாக பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர www.tnhestyle=”width:100%;height:100%;”h.org, www.tnmedicalselection, ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் வழங்கி கல்லூரி முதல்வர் டாக்டர் வனிதா கூறுகையில், கடந்தாண்டு அரசு ஒதுக்கிடு 750 விண்ணப்பங்கள். 250 நிர்வாக விண்ணப்பங்களை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டன.

இந்தாண்டு 1600 விண்ணப்பங்கள் வரபெற்றுள்ளன. இதில் அரசு ஒதுக்கீடு 1100-ம், நிர்வாக ஒதுக்கீட்டில் 500-ம் வந்துள்ளன. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 18-ந்தேதி மாலை 5 மணிக்குள் அலுவலக வேலை நேரங்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் வங்கி காசோலை பெற மருத்துவ கல்லூரி வளாகத்தில் வங்கியின் சிறப்பு தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.