ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வேலை நிறுத்தங்களில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் எச்சரித்துள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாத இறுதியில் பத்து லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர்.

இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் தலைவர் விவிஎஸ்.ஆர். சர்மா, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வங்கி ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.