நேற்று பூமிக்கடியில் உள்ள மின்சார கேபிள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து, புகை கிளம்பியது. இந்த சத்தம்கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர்.

அப்போது, சாலை பெயர்ந்து கிடந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக அந்த பகுதி முழுவதும் மினிவினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு மின்வினியோகம் செய்யும் தனியார் நிறுவன ஊழியர்கள் விரைந்து வந்து மின்சார கேபிள்களை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.

இந்தநிலையில், நேற்று மாலை 5 மணியளவில் தாதர் பகுதியில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. அரை மணி நேரத்திற்கு பிறகு மின் வினியோகம் செய்யப்பட்டது.