ஜம்மு-காஷ்மீரின் லே மாவட்டத்தில் புத்த மதத்தினரின் 2 நாள் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

ஆண்டுதோறும் இரண்டு நாட்களுக்கு நடைபெறும் புத்தமத திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்றுள்ள ஏராளமான புத்தமத பிக்குகள் மந்திரங்களை உச்சரித்து, தொடர்ச்சியான வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில் ஏராளமான புத்தமத பிக்குகளும், விதவிதமான ஆடைகளை அணிந்து, பாரம்பரிய நடனமாடி பொதுமக்களை மகிழ்வித்து வருகின்றனர்.