புதுச்சேரியில் அரசை விரைந்து இயங்க விடாமல் பல முட்டுக்கட்டைகள் இருப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சன்னியாசிக் குப்பத்தில் தனியார் பங்களிப்புடன் 36 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியை முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சில முட்டுக் கட்டைகள் இல்லாவிட்டால் தமது அரசு மேலும் விரைவாக செயல்படும் எனத் தெரிவித்தார்.

பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில், சப்பாத்தி, இனிப்பு, தயிர் போன்றவை கூடுதலாக வழங்கப்பட இருப்பதாக மாணவர்களிடம் கலந்துரையாடிய போது நாராயணசாமி தெரிவித்தார்.