ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மக்களவை தொகுதி எம்.பி.யாக இருப்பவர் பைஜயந்த் பாண்டா. பிஜு ஜனதா தளம் கட்சியை சேர்ந்த பாண்டா சமீபத்தில் கட்சிக்கு விரோதமாக கருத்து கூறியதால், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளானார். இதன் பின்னர், கட்சியை விட்டு பாண்டா விலகினார்.
அவர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக மக்களவை சபாநாயகருக்கு பாண்டா இன்று கடிதம் எழுதியுள்ளார். எனினும், அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வது குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை.