பிக்பாஸ் சீசன் 2 ஒளிபரப்பாக இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது. ஆனால், அதுவரை மக்களுக்கு அதில் கலந்து கொள்ளப் போகிறவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள பொறுமை இல்லை. இவர்களாக இருக்குமோ, அவர்களாக இருக்குமோ என்பது தான் இப்போது ஹாட் டாபிக்கே.

கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி செம ஹிட். தொலைத்தொடர்பு சாதனங்கள் ஏதும் இல்லாமல், ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் வாழ்ந்த பிரபலங்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டதைப் பார்ப்பதில் மக்களுக்கு அப்படி ஒரு அலாதி இன்பம்.

தினமும் என்ன வேலை இருக்கிறதோ இல்லையோ, இரவு 9 மணியானால் டிவி முன் ஆஜராகி விட்டனர் கோடிக்கணக்கான மக்கள். இது ஓவியாவிற்கு கிடைத்த வாக்கே சாட்சி.Image result for big boss 2

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி வரும் 17ம் தேதி முதல் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. முந்தைய சீசனைப் போலவே இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்குகிறார்.

அதேபோல், கடந்த முறை மாதிரியே இம்முறையும் அதில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களின் பெயர்களை ரகசியமாகவே வைத்துள்ளனர். ஆனால் அவ்வப்போது புரோமோக்கள் மூலம் போட்டியாளர்கள் பற்றிய குறிப்புகளை மட்டும் தந்த வண்ணம் உள்ளனர்.

முதல் சீசன் இருந்தது போன்றே கலவையான நபர்களை இம்முறையும் போட்டியாளர்களாக கொண்டுவர நிகழ்ச்சி தயாரிப்பு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. எனவே, கடந்த முறை போலவே புதிய பிரச்சினைகளைக் கொண்டு வருபவர், பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்குபவர், காமெடிக்கு ஒருவர், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒருவர் என ஒவ்வொரு போட்டியாளரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகின்றனராம்

கடந்த முறை பிரபலமடைந்த ஓவியா போலவே, இம்முறையும் ‘பிக்பாஸ் வீட்டில் உச்ச நடிகைகளை (ஓவியாக்களை) களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், இம்முறை கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களில் பார்வையாளர்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது யாரைத் தெரியுமா? எஸ், உங்கள் யூகம் சரிதான். கடந்த முறை போலவே, இம்முறையும் அவ்வீட்டில் காதல் பறவைகளாக வலம் வரப்போகிறவர்கள் யார் என்பது தான் பலரது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த முறை ஆரவைக் காதலித்த ஓவியாவால் பிக்பாஸ் வீடே கலர்புல்லாக இருந்தது. எனவே, இம்முறையும் நிச்சயம் இதே போன்று திருமணமாகாத இளம் நாயகன், நாயகி போட்டியாளராக இடம் பிடிப்பார் எனத் தெரிகிறது. அவர்கள் யார் என்பது தான் பிக்பாஸ் ரசிகர்களின் ஆர்வமே. இன்னும் ஒரு வாரத்தில் யார் அந்த காதல் புறாக்கள் என்பது இலைமறைகாயாக தெரிந்து விடும்