தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சரோஜினி தேவி கண் மருத்துவமனையில் சுமார் ஒரு கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள அரசு கண் வங்கியை அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சி.லக்‌ஷமா ரெட்டி இன்று திறந்து வைத்தார். தென் இந்தியாவின் முதல் அரசு கண் வங்கி இதுவாகும்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த லக்‌ஷமா ரெட்டி, ஏழைகளுக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தெலங்கானா அரசு சுகாதார துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருகிறது. ஏற்கெனவே, நாட்டின் முதல் கருவுற்றல் மையம் ஐதாராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டில் மொத்தம் 120 கோடி மக்கள் உள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக 1 கோடி மக்கள் உயிரிழக்கின்றனர். அவர்களில் 2 சதவீத மக்கள் கண் தானம் செய்தால் போதும் இந்தியாவில் பார்வையற்றவர்களே இல்லை எனும் நிலையை நாம் எட்டிவிடலாம் என அவர் தெரிவித்தார்