பிரபல தனியார் சேனலான விஜய் டிவியின் மூலம் பிரபலமடைந்து சினிமாவில் ஜொலிப்பவர்கள் ஏராளம்.

சிவகார்த்திகேயன், சந்தானம், மாகாபா ஆனந்த், ஜாக்லின், ரக்சன் என பலர் சினிமாவில் நடித்து விட்ட நிலையில், தற்போதைய விஜய் டிவியின் சூப்பர் ஸ்டார் ராமரும் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

Image result for ராமரும் சினிமாவில்மதுரையை சேர்ந்தவரான ராமர், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் ஆடிசனில் கலந்து கொண்டு நடிகர் சிவகார்த்திகேயனுடம் விஜய் டிவிக்கு வந்தவர். தற்பொழுது சிவகார்த்திகேயன் முன்னணி நாயகனாக ஆகிவிட்ட நிலையில், தனக்கென சரியான பிரேக் கிடைக்காமல் காத்திருந்தார் ராமர்.

Related imageஅதன் பலனாக, அது இது எது நிகழ்ச்சியில், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் ‘சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை’ கலாய்த்து அவரைப் போலவே பேசிய ‘என்னமா இப்படி பண்றீங்களேமா’, வசனம் வைரலாகவே தற்பொழுது எக்கச்சக்க ரசிகர்களுடன் வளம் வருகிறார்.

Image result for ராமரும் சினிமாவில்தற்பொழுது கூட இவரின் ஆத்தாடி என்ன உடம்பி பாடல் வைரலாகி வருகிறது. இந்நிலையில் L.S. பிரபுராஜா எனும் அறிமுக இயக்குனரின் படைப்பாளன் எனும் திரைப்படத்தில், காமெடி நாயகனாக நடிக்க இருக்கிறார்.

Image result for ராமரும் சினிமாவில்முன்னதாக காஞ்சனா 2 படத்தின் ஒரு பாடலில் மட்டும் வந்து சென்றிருந்த இவர், முழு நீள காதாப்பாதிரத்தில் நடிக்கும் முதல் திரைப்படம் இது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

Image result for ராமரும் சினிமாவில்காக்கா முட்டை பிரபல, விக்கி மற்றும் ரமேசும் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தில் மற்றொரு விஜய் டிவி பிரபலமான ஜட்டி ஜெகநாதனும் இணைந்து இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஜூன் 4ம் தேதி பூஜையுடன் துவங்கியது.